home detention

வீட்டுக்காவல், மின்னணுக் கண்காணிப்பு

தமிழ் விளக்கம்

குற்றத்தின் தன்மை பொறுத்து ஒருசில குற்றவாளிகளை சிறையிலடைக்கமால், குற்றவாளியின் வீட்டிலோ அல்லது நீதிமன்றம் அனுமதிக்கும் பிற இடங்களிலோ அடைத்து வைப்பது. இவ்வாறு அடைத்துவைக்கப்படும் குற்றவாளிகளின் பின்னணியைப் பொறுத்து அவர்களின் நடமாட்டத்திற்கு, தகவல் தொடர்புகளுக்கு, சந்திக்க வரும் பார்வையாளர்களுக்கு நீதிமன்றம் கட்டுப்பாடுகள் விதிப்பதுண்டு. குற்றவாளிகளின் நடமாட்டத்தை, அவர்கள் உடலில் பொருத்தப்பட்ட மின்னணுப் பட்டைகள் (radio transmitters) கொண்டு, மையக் கணனி மூலமாகக் கண்காணிப்படுவார்கள். சில எதேச்சாதிகார அரசுகள் தங்களுடைய அரசியல் எதிரிகளை ஆண்டுக்கணக்கில் வீட்டுக் காவலில் வைப்பதுண்டு.

English

A corrections program in which as part of the sentence a convicted felon is confined to home or other restrictions outside of penal facilities. Many jurisdictions use electronic home-monitoring systems to ensure compliance. In these systems, convicts are fitted with small radio transmitters riveted on their ankles, which keep a central computer notified about the person's whereabouts.