home health services
வீட்டிற்கே வந்து மருத்துவ சேவை வழங்குதல், வீட்டிற்கே வந்து மருத்துவ உதவி, சிச்ரூஷை (செவிலிய/ நலம் பேணும்) பணி செய்தல்
தமிழ் விளக்கம்
தொழில் வழி சிகிச்சை (occupational therapy), நலமீட்புக்கான உடற்பயிற்சி, பேச்சுப் பயிற்சி, நோயாளிகளைத் தொடர்ந்து கண்காணித்தல் போன்ற சேவைகளைச் செய்வது. சுகாதாரப் பணியாளர்களோ, சுகாதார நிறுவனங்களோ தனிப்பட்ட முறையில் சேவைக் கட்டணம் பெற்றுக்கொண்டு சேவையளிப்பதும், மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் சார்பாக சேவையளிப்பதும் வழக்கமான ஒன்று. அரசு மருத்துவ மனைகளில் வைத்துச் சிகிச்சை அளிப்பதைவிட, வீட்டிற்கே சென்று சிகிச்சை அளிப்பது நோயாளிகளுக்குச் செளகரியமாகவும் ஆறுதலாகவும் சிக்கனமாகவும் இருப்பதால், சிலநேரங்களில் பொது (அரசு) சுகாதார நிறுவனங்களும் இது மாதிரியான சேவைகளில் ஈடுபடுகின்றார்கள்.
English
Programs that provide for medical, nursing, occupational therapy, physical therapy, speech therapy, and follow-up care of patients in their homes. Many of these services are provided in the private sector for a fee by health care personnel or by private nursing service care, financed in part by third-party payment. Public health care services in the patient's home are also available. This provides a system that often is more comfortable for the patient and more economical than hospitalization or nursing home care.