home visits

இல்ல விஜயம், இல்லம் சென்று பார்த்தல

தமிழ் விளக்கம்

வாடிக்கையாளர்களின் இல்லத்திற்கே சென்று பார்ப்பது சமூகப் பணியில் முக்கியமான செயல்முறை. சமூகப் பணியாளரின் கடமைப் பட்டியலில் நண்பராகச் செயல்படும் பார்வையாளர் முறை, அதன் பயன் கருதி ஆரம்ப காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களுக்காகச் சமூகப் பணியாளர்கள் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் செல்ல விரும்பினர். இயலாமை காரணமாக சமூகப்பணியாளர்களைச் சந்திக்க இயலாதவர்களை நேரில் சந்தித்தனர். வீடுகளுக்குச் செல்வது வாடிக்கையாளர்களை மேலதிகமாகப் புரிந்துகொள்ள சமூகப் பணியாளர்களுக்கு உதவியாய் இருந்தது. வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குச் செல்வதென்பது அவர்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளைப் புரிந்துகொள்ளவும், அண்டை அயலாரோடு பரிச்சயம் ஏற்படுத்திக்கொண்டு சமூகப்பணியாளர்கள் செய்யவிரும்பும் சேவைகளுக்கு ஆதரவு திரட்டவும் உதவும். முன்னறிவிப்பில்லாமல் வீடுகளுக்கு செல்லும் முறையின் மூலம் வாடிக்கையாளரின் இயல்பான வாழ்க்கை முறைகளை அறிந்துகொண்டு அதற்கேற்ப உதவி செய்யவும், சில நேரங்களில் செய்யப்படவிருக்கும் உதவிக்கு வாடிக்கையாளர் தகுதியானவரா என்று தீர்மானிக்க உதவும்.

English

In social work, the act of going to clients'homes to provide professional social services. Home visits have been part of the social work repertoire since the days of friendly visitors, and they occur for many reasons. Some social workers make home visits because their clients have disabilities or otherwise are unable to come to the agency. Some do so because they believe the helping process can be more effective and efficient if conducted in an environment familiar to the client. Children and frail elderly people, for example, may benefit. Other home visits occur because the social worker seeks to mobilize a neighborhood or county toward a social cause. In some instances, social workers are required to make such visits unexpectedly to investigate the client's normal living conditions. This is occasionally done to find out if the client is as poor or as incapable of providing child care as has been claimed.