homeless shelters

வீடில்லாதவர்களுக்கான தங்குமிடங்கள்

தமிழ் விளக்கம்

வீடற்றவர்களுக்காக அரசோ, தனியாரோ செய்துதரும் தங்குமிட வசதிகள். இத்தங்குமிடங்களில் படுக்கை, உணவு, தேவைக்கேற்ப கொடுக்கப்படும் மருத்துவம் மற்றும் பிற உதவிகளை இதை நிர்வகிப்போர் தங்கள் வசதிப்படி கொடுப்பார்கள். யாரை அனுமதிப்பது என்பதில் சில இடங்களில் கட்டுப்பாடுகள் இருந்தாலும், வேறு சில இடங்களில் இடவசதி இருக்கும் பட்சத்தில் தேவையானவர்களுக்குத் தங்க அனுமதி அளிக்கின்றார்கள். பெரும்பாலான நிறுவனங்கள் தனியார் நன்கொடைகள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களின் பங்களிப்பையே அதிகம் சார்ந்து இயங்குகின்றது.

English

Private or publicly funded residential facilities for individuals and families who otherwise have no homes. The shelters typically offer beds, meals, and sometimes health and social services to as many needy people as possible, depending on available room, supplies, and demand. Some shelters have strict requirements about who is accepted, whereas others admit anyone on an as-available basis. Many shelters are highly dependent on private contributions of money, food, and volunteer workers.