homogeneous groups
ஒத்த தன்மையுள்ள குழுக்கள்
தமிழ் விளக்கம்
ஒரே மாதிரியான குணாதிசயங்களைக் கொண்ட உறுப்பினர்களடங்கிய குழு. வயதிலும், பாலினத்திலும், பிரச்சனையிலும் ஒத்ததன்மையுடையவர்களாயிருத்தல். இந்த ஒத்த தன்மையால் உறுப்பினர்களின் கவனம் சிதறாது, ஒருமுகப்பட்டு குழு உறுப்பினர்களின் அடிப்படைப் பிரச்சனைகளில் கவனம் செலுத்த உதவும் என்று குழுக்களை வழிநடத்தும் நிபுணர்கள் கருதுகிறார்கள்
English
Groups whose membership comprise people of similar traits; for example, members who are of the same age or sex or who share the same problem. Some group leaders believe homogeneity permits the members to focus on their core problem areas without having to deal so much with distracting side issues. See also single-focus group, heterogeneous groups, and dissonance theory of groups.