homosexuality, latent

உள்ளுறையும் தன்பாலின நாட்டம் / மறைந்திருக்கும் தன்பாலின நாட்டம்

தமிழ் விளக்கம்

உளவியக்கக் கோட்பாட்டின்படி, தன்பாலினத்தவர் மீது ஆழ்மனதிலிருக்கும் காம/சிற்றின்ப இச்சை. தன்பாலினத்தவர் மீது வெளிப்படையாக உடலுறவு கொள்ளாவிட்டாலும், தங்களுடைய நடத்தையால் அதற்கான சமிக்ஞைகளைச் செய்வார்கள். மறைந்திருக்கும் தன்பாலின இச்சையும், அதை பிறருக்குத் தெரியாவண்ணம் மறைக்கும் முயற்சியும் இறுதியில் ஓரினச்சேர்க்கை பற்றிய வெறுப்புணர்வுக்கு வழிவகுக்குமென்று உளவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள்.

English

In psychodynamic theory, the presence of erotic impulses outside the individual's conscious awareness toward one or more members of the same sex. The individual might give behavioral clues about this orientation but does not engage in overt homosexual activity. Some theorists suggest that latent homosexuality, accompanied by efforts by the individual to conceal the orientation from oneself and others, can result in homophobia. See also latent homosexual.