hospice
அந்திம பராமரிப்பகம், இயலாரகம், பிணியாளர் பேணகம், தீராத நோய்களால் வருந்துவோர்க்கான மருத்துவமனை, ஆதரவற்றோர்க்கான இல்லம்
தமிழ் விளக்கம்
மரணத்தின் விளிம்பிலிருப்போருக்கும், தீராத நோயினால் அவஸ்தைப்படுவோருக்கும் ஆறுதலாயிருக்கச் செய்யப்படும் பலவிதமான சேவைகள். அந்திம பராமரிப்பகங்கள் என்று தனியாகவோ அல்லது தீராத நோயினால் அவதிப்படுவோருக்கு அவர் இல்லங்களிலேசேவைகள் வழங்கப்படுகின்றன. சில இடங்களில் மரிக்கும் தருவாயிலிருப்பவர்களின் உறவினர்கள், நண்பர்கள் உடனிருக்கவும் வசதி உண்டு.
English
A philosophy of caring and an array of programs, services, and settings for people with terminal illness. Hospice services are usually offered in nonhospital facilities with homelike atmospheres where families, friends, and the significant other can be with the dying person.