hot line
அவசரகாலத்திற்கான தொலைபேசி
தமிழ் விளக்கம்
துயரத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்யத் தொண்டு நிறுவனங்கள் மூலம் இயக்கப்படும் தொலைபேசித் தொடர்பு. நெருக்கடியிலிருப்பவர்களும், உதவி தேவைப்படுபவர்களும் தொடர்புகொள்ள உதவும் தொலைபேசி. சமூகப் பிரச்சனைகளாலோ, மனச் சோர்வினாலோ பாதிக்கப்பட்ட நபர்கள் தொடர்புகொண்டு உதவி பெற ஏற்படுத்தப்பட்ட தொலைபேசித் தொடர்பு. பிரச்சனைக்குள்ளானவர்கள் தொடர்புகொள்ளும் போது, அதைக் கவனத்துடன் கேட்டறிந்து பொருத்தமான முறையில் ஆற்றுப்படுத்துமளவு அனுபவமுள்ளவர்கள் இத் தொலைபேசியின் மூலமாக பதிலளிப்பார்கள். அதீத மனச்சோர்வினால் தற்கொலை செய்துகொள்ள நினைப்பவர்கள், குடும்பச் சச்சரவுகளினால் வன்முறைக்கு உள்ளானவர்கள், வீட்டைவிட்டு வெளியேறியவர்கள், வேறு வகையில் உதவியோ தகவலோ தேவைப்படுபவர்கள், உதவியின் பொருட்டு தொலைபேசியில் தொடர்புகொள்ளும் போது, நிபுணர்களோ அல்லது தன்னார்வத் தொண்டர்களோ தொலைபேசி வழியாக அவர்களிடம் மனமாற்றம் ஏற்படும்படியான ஆறுதல் வார்த்தைகள் சொல்லியும், அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளைப் பெற வழிகாட்டியும் பிரச்சனையிலிருந்து விடுபட உதவுவார்கள்.
English
A communications system that provides for immediate and direct telephone contact between certain people in times of emergency. Many communities have established such systems so that trained listeners are on hand to receive calls from people who experience emotional or social problems. There are also special-purpose hot lines such as those for runaways, whistle-blowing, suicide prevention, family violence, and other problems. See also help line and Nineline.