household

குடும்பம்

தமிழ் விளக்கம்

ஒரே வீட்டில் வசித்து, ஒரே அடுப்பில் சமைத்துப் பகிர்ந்துண்டு வாழ்கிற உறவினர் குழுவிற்குக் குடும்பம் என்று பெயர். குடும்பம் என்பது இரத்த உறவாலோ, அல்லது திருமணம், சுவீகாரம் (தத்தெடுத்தல்) போன்ற வேறு சட்டபூர்வமான முறைகளிலோ தொடர்பு பட்ட ஒரு உறைவிடக் குழுவாகும். குடும்பத்தில் சேர்ந்து வழ்பவர்களின் எண்ணிக்கை குடும்பத்திற்குக் குடும்பம் மாறுபடும். அனைத்துலக மனித உரிமைகள் சாசனத்தின் 16(3) ஆவது விதிப்படி, 'குடும்பம் என்பது சமூகத்தின் இயல்பானதும், அடிப்படையானதுமான அலகாகும் என்பதுடன், அது சமூகத்தாலும், தேசத்தாலும் பாதுகாக்கப்படுவதற்கு தகுதி பெற்றுள்ளது' என்று பிரகடனப்படுத்தியுள்ளது.

English

The U.S. Bureau of the Census term referring to all people, whether related or not, who live in the same dwelling unit. This includes individuals (single-person households) as well as groups of people.