housing programs

வீட்டு வசதித் திட்டங்கள்

தமிழ் விளக்கம்

குடியிருப்பதற்குப் பொருத்தமான வீடுகளை வாடகைக்குப் பெற முடியாதவர்களுக்கும், சொந்தமாக வீடு கட்டிக்கொள்ள முடியாதவர்களுக்கும் அரசு சார்பில் செய்துதரப்படும் வீட்டுவசதித் திட்டம். குறைந்த வாடகையில் கொடுக்கப்படும் அரசு வீடுகள், வாடகை - மானியத் திட்டம், குறைந்த வருமானமுள்ளவர்களுக்கு அரசே கட்டித்தரும் வீடுகள், வீடு கட்டிக்கொள்ள அரசு கடனாகத் தரும் நிதியுதவி, கிராம வீட்டுவசதிக்கான கடன் திட்டங்கள், விவசாயத் தொழிலாருக்கான வீட்டுக் கடன் திட்டம், குறிப்பிட்ட சமூகங்களுக்கான வீட்டு வசதித்த திட்டங்கள், (நெசவாளர், மீனவர், முன்னாள் இராணுவ வீரர்) மற்றும் வீடு பழுதுபார்க்கக் கொடுக்கப்படும் கடனுதவி என்று இது பலவகைப்படும். இதுதவிர வீட்டு அடமானக் கடன் பெறவும் அரசே நிறுவனங்களை நடத்துகிறது.

English

Publicly funded and monitored programs designed to provide suitable homes, especially for those unable to find or pay for them themselves. In the United States, most of these programs are administered by the U.S. Department of Housing and Urban Development (HUD). These programs include Low-Rent Public Housing, the Rent-Subsidy Program, Lower-Income Housing Assistance, Home Ownership Assistance for Low-Income Families, Rural Rental Housing Loans, Farm Labor Housing Loans, Indian Housing Improvement programs, and Housing Repair Assistance for Low-Income Families. In addition, the government sponsors a guaranteed mortgage loan program and housing assistance for veterans.