HR-10 plan

சுயதொழில் புரியும் ஒருவர் தன்னுடைய வருமானத்தில் ஒருபகுதியை ஓய்வூதியப் பலன்களுக்காக செலுத்தும் திட்டம்

தமிழ் விளக்கம்

யூஜின் ஜேம்ஸ் கியோக் (Eugene James Keogh) என்பவரால் பிரேரிக்கப்பட்டதால் இத்திட்டம் கியோக் திட்டம் என்றும் அழைக்கப்படுகின்றது. இத்திட்டதில் சேர்பவர்கள் வரையறுக்கப்பட்ட சந்தா செலுத்தி, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியப் பலன்கள் பெற தகுதி படைத்தவர்கள் ஆவார்கள்.
பார்க்க: Keogh Plan - கியோக் திட்டம் - சுயதொழில் செய்பவர்களுக்கும் (சுயமாகப் பணிபுரியும் சமூகப்பணியாளர்களையும் உள்ளடக்கியது), பெருநிறுவனங்களில் பணியாற்றாதவர்களுக்கும் பயன்தரக்கூடிய ஓய்வூதிய திட்டம். இத்திட்டத்தில் சேருபவர்கள் தங்களின் ஆண்டு வருமானத்தில் வரையறுக்கப்பட்ட ஒரு தொகையை ஓய்வூதியப் பலன்களுக்காக செலுத்தி, தங்களுடைய 59.5 வயதிலிருந்தோ அல்லது 70 வயதிலிருந்தோ பலன்களைப் பெறலாம். இத்திட்டத்திற்கு செலுத்தும் தொகைக்கு வருமானவரி விலக்கு உண்டு. இத்திட்டம் நியூயார்க் செனட்டர் கியோக் அவர்களால் பிரேரிக்கப்பட்டதால் அவருடைய பெயரிலே அடையாளப்படுத்தப்படுகிறது

English

See Keogh Plan.