Hull House
ஹல் மாளிகை
தமிழ் விளக்கம்
சமூகப் பணியில் சமுதாய அமைப்புப் பாடமுறையைத் தோற்றுவித்தவர் என்ற பெருமைக்குரிய ஜேன் ஆடம்ஸ் மற்றும் எலன் கேட்ஸ் ஸ்டார் என்ற இரண்டு பெண்மணிகளால், 1889 ஆம் ஆண்டு சிகாகோ நகரத்தில், ஐரோப்பியாவிலிருந்து புலம் பெயர்ந்த மக்களுக்குச் சேவை செய்ய ஆரம்பிக்கப்பட்டதுதான் Hull House என்றழைக்கப்பட்ட சமுதாய ஊழியக் குடியிருப்புக் குழு அல்லது கூட்டுவாழ்வுக் குழு (Settlement House). இதுதான் அமெரிக்காவில் உருவான முதல் சமுதாய ஊழியத்திற்காக உருவாக்கப்பட்ட கூட்டு வாழ்வுக்குழு. இது மாதிரியான ஊழியர் கூட்டு வாழ்வுக் குழுக்கள் வறுமை வயப்பட்ட நகர்ப்புறச் சேரிகளில் தொடங்கப்பட்டு, அம்மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கான அனைத்து சேவைகளும், சமூக மாற்றத்திற்கான உந்து சக்தியையும் வழங்கின. Hull House ஊழியர் குடியிருப்பை முன்மாதிரியாக வைத்து 1920களில் அமெரிக்காவெங்கும் 500 ஊழியர் குடியிருப்பகங்கள் தோற்றுவிக்கப்பட்டிருந்தன. 1965 hull house அமெரிக்காவின் தேசிய வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு அருங்காட்சியாகமாக்கப்பட்டுள்ளது.
English
The most famous of the settlement houses, founded in Chicago in 1889 by Jane Addams and Ellen Gates Starr. Among the first of its kind, it was a community center for poor and disadvantaged people of the area and was the setting for initiating various social reform activities.