human development
மனித வளர்ச்சி
தமிழ் விளக்கம்
மனிதரின் ஆயுட்காலத்தில் ஏற்படும் உடல், மன, சமூக மற்றும் அனுபவங்களில் ஏற்படும் மாற்றங்களையே மனித வளர்ச்சி என்று குறிப்பிடுகிறோம். இந்த மாற்றங்கள் தொடர்ச்சியாக, ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்டதாக, முன்கூட்டியே கணிக்கத்தக்கதாக இருந்தாலும், அது மனிதருக்கு மனிதர் மாறுபடும் தன்மைகொண்டது. மனிதரின் சராசரி ஆயுட்காலம், பிறப்பு மற்றும் இறப்புவிகிதம், அவர்களின் கல்வித்தகுதி, சுகாதார வசதி, சராசரி ஆண்டுவருமானம், பெண்கள் நிலை, பொருளாதாரச் சமத்துவம் போன்ற பல நிலைகளைக் கணக்கில் கொண்டு மனித வளர்ச்சிக் குறியீட்டெண் தயாரிக்கப்பட்டு நாடுகளிடையே மனித வளர்ச்சியை ஒப்புமைப்படுத்தும் முயற்சிகளும் நடந்து வருகின்றன.
English
The physical, mental, social, and experiential changes that occur over a person's life cycle. These changes are continuous, occur in fairly consistent sequences, and are cumulative with other changes. Human development occurs in a predictable manner, but the rate of change is unique to each individual.