human immunodeficiency virus (HIV)
மனித நோய்த்தடுப்புக்குறை வைரஸ், மனிதனின் நோய் எதிர்ப்பாற்றலைக் குறைக்கும் திறன் கொண்ட வைரஸ் (தீ நுண்மம்)
தமிழ் விளக்கம்
பெறப்பட்ட நோய்த்தடுப்பாற்றல் குறைபாடுகளின் நோய்க்கூட்டறிகுறி, பெறப்பட்ட மனித நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டு நோய்க்கூட்டறிகுறி (Acquired immune deficiency syndrome) எய்ட்ஸ் எனும் இந்த நோய் மனிதனின் நோய் எதிர்ப்பாற்றலைக் குறைக்கும் திறன் கொண்ட தீ நுண்மத்தால் (வைரசால் HIV ) ஏற்படுகிற ஒரு நோயாகும். இரண்டு விதமான HIV வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளன. HIV 1 உலகம் முழுக்க காணப்படுகின்றது. HIV 2 மத்திய ஆபிரிக்காவில் மட்டும் காணப்படுகின்றது. இந்த நோயானது மனிதர்களின் நோய் எதிர்ப்பாற்றலைப் படிப்படியாகக் குறைத்து, பிற தொற்றுநோய்கள் இலகுவாக தொற்றிக்கொள்ள வழிவகுக்கின்றது. எச்.ஐ.வி தொற்றுக்குட்பட்ட இரத்தம், விந்து, யோனித் திரவம், முன்விந்துத் திரவம், தாய்ப்பால் போன்ற உடல் திரவங்களைக் கொண்ட உடலில் உள்ள சீதச்சவ்வு அல்லது இரத்த ஓட்டத்துடன் ஏற்படும் நேரடித் தொடர்பினால் இந்த வைரசானது ஒருவரிலிருந்து வேறொருவருக்குத் தொற்றுகின்றது.
English
The acquired immune deficiency syndrome (AIDS) virus, which attacks the body's immune system and thereby leaves the HIV-infected person vulnerable to a debilitating or fatal opportunistic infection, cancer, or neurological condition. Two types of HIV have been identified: HIV 1 is found worldwide and HIV 2 appears mainly in central Africa. The progression of infection is similar. Blood, semen, vaginal secretions, and breast milk have been implicated in transmission. HIV is transmitted by unprotected penetrative sexual intercourse with an infected person, by infected hypodermic needles, by medical transfusion of untreated blood, and from infected mother to child (in utero, during birth, or shortly after birth). HIV cannot be transmitted casually through, for example, touching an infected person or sharing a drinking glass. HIV infection and infectiousness are presumed to be lifelong.