human rights

மனித உரிமைகள்

தமிழ் விளக்கம்

மனித உரிமை என்பது, எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். மனித உரிமைப் பிரகடனம், 1948 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த உரிமைகள் 'மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாகக்' கருதப்படுகின்றன. இனம், சாதி, நிறம், சமயம், பால், தேசியம், வயது, உடல் உள வலு ஆகியவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருக்கும் இந்த அடிப்படை உரிமைகள், மனிதர் சுதந்திரமாக, சுமூகமாக, நலமாக வாழ அவசியமான உரிமைகளாகக் கருதப்படுகின்றன. மனித உரிமைகள் என்பதனுள் அடங்குவதாகக் கருதப்படும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுள், வாழும் உரிமை, சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமநிலை, நகர்வுச் சுதந்திரம், பண்பாட்டு உரிமை, உணவுக்கான உரிமை, கல்வி உரிமை என்பன முக்கியமானவை.
இந்தியாவின் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993 இந்திய நாட்டிலுள்ள மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தபட்ட சட்டமாகும். தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒன்றையும் மாநிலங்களில் மாநில மனித உரிமை ஆணையங்கள் அமைப்பதற்கும், மனித உரிமைகள் திறம்பட பாதுகாக்கப்படுவதற்கும், அத்துடன் தொடர்புள்ள அல்லது சார்புறுபான பொருட்பாடுகளுக்கு இச்சட்டம் வழிவகை செய்கின்றது. இந்தியக் குடியரசின் நாற்பத்து நான்காம் ஆண்டில் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டமாகும்.

English

The opportunity to be accorded the same prerogatives and obligations in social fulfillment as are accorded to all others without distinction as to race, sex, language, or religion. In 1948, the U.N. Commission on Human Rights spelled out these opportunities. They include the basic civil rights recognized in democratic constitutions such as life, liberty, and personal security; freedom from arbitrary arrest, detention, or exile; the right to fair and public hearings by impartial tribunals; freedom of thought, conscience, and religion; and freedom of peaceful association. They also include economic, social, and cultural rights such as the right to work, education, and social security; to participate in the cultural life of the community; and to share in the benefits of scientific advancement and the arts.