human services

மனித சேவைகள்

தமிழ் விளக்கம்

தங்களுடைய முன்னேற்றத்திற்கும் நலவாழ்விற்கும் தங்களால் ஏதும் செய்யகொள்ள இயலாதவர்களுக்கு வழங்கப்படும் பொருளாதாரம் மற்றும் பிறஉதவிகளும், அது மாதிரியான உதவிகளைச் செய்ய வடிவமைக்கப்படும் திட்டங்களும், செயல்பாடுகளும் அடங்கியதுதான் மனித சேவைகள். சமூக சேவைகள், நல உதவிகள் போன்ற சொல்லாடல்களின் மாற்றுச் சொல். சமூக நலம் என்ற வார்த்தைப் பிரயோகத்தில் மறைமுகமாகத் தென்பட்ட ஏளனத்தை அகற்றவே இச்சொல் பயன்பாட்டிற்கு வந்தது. அமெரிக்க அரசின் சுகாதாரம், கல்வி மற்றும் சமூகநலத் துறையின் பெயர் 1979 ஆம் ஆண்டு சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறையென மாற்றப்பட்டதும் இச்சொல் பிரபலமானதற்கு ஒரு காரணம். இந்த வார்த்தைப் பிரயோகம் சமூகப்பணியாளர்களோடு பிறதுறை நிபுணர்களும், பணியாளர்களும் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்புகளை விரிவாக்கியது. மனித சேவைகளில் முக்கியமான ஆறு உட்கூறுகள் இருக்கின்றன 1. தனிப்பட்ட சமூக சேவைகள் 2. சுகாதாரச் சேவைகள் 3. கல்விச் சேவைகள், 4. வீட்டுவசதி, 5. வருமானமீட்ட வழங்கப்படும் உதவிகள், 6 நல்வாழ்விற்கான சமூக நீதி போன்றவையாகும்.

English

Programs and activities designed to enhance people's development and well-being, including providing economic and social assistance for those unable to provide for their own needs. The term“human services”is roughly synonymous with the terms“social services”or“welfare services”and includes planning, organizing, developing, and administering programs for and providing direct social services to people. The term came into wider use in 1979 when the U.S. Department of Health and Human Services (HHS) was established to replace the U.S. Department of Health, Education, and Welfare (HEW). It was thought that the term“welfare”had a negative connotation and that the organization would have more influence with the new name. Use of the term“human services”(and“human resources”) instead of“social welfare services”is also part of the trend toward employing other professionals in addition to social workers in the services arena. Some social scientists identify the six basic human services as (1) personal social services, (2) health, (3) education, (4) housing, (5) income, and (6) justice and public safety.