humanistic orientation
மனிதநேய நோக்குநிலை
தமிழ் விளக்கம்
பல்வேறுவகையான கருத்துக்கள், மதிப்பீடுகள், செயல்முறைகளை உள்ளடக்கிய மனிதநேய நோக்குநிலை. மனிதர்களுடைய பலவீனங்களைப் பெரிதுபடுத்தாமல், அவர்களால் எதையெல்லாம் சாத்தியமாக்கமுடியும் என்பதை முன்னிறுத்துகின்றது. இந்த அணுகுமுறையே அரசியல் மற்றும் சமூக தளத்தில் சமத்துவத்தையும், மனித உரிமைகளையும் வற்புறுத்தியது. இந்த அணுகுமுறையைக் கையாளும் சமூகப்பணியாளர்கள், வாடிக்கையாளர்களின் பலகீனங்களை அலசியாராயாமல் 'இங்கே இப்போதே' என்ற முறையில் அவர்களின் சுயஇயல்பாக்க மேம்பாட்டிற்கு உதவுகின்றனர்.
English
A group of concepts, values, and techniques that emphasize people's potential rather than their dysfunctions. Social workers and other therapists with this orientation tend to help clients by developing the therapeutic relationship and by concentrating on the“here and now.”See also self-actualization.