hunger strike
உண்ணாவிரதப் போராட்டம், பட்டினிப் போராட்டம்
தமிழ் விளக்கம்
சமூக அநீதிக்கெதிராகவோ, தவறான கொள்கை முடிவுகளுக்கு எதிராகவோ ஆகிம்ஸா வழியில் நடத்தப்படும் போராட்ட முறை. உண்ணமறுத்துப் போராடுவதால், அந்தப் போராட்டத்திற்குக் காரணமானவர்கள் குற்ற உணர்வுக்கு ஆளாகி தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பில் நடத்தப்படுவது. உண்ணாவிரதப் போராட்டத்தை வலிமை வாய்ந்த நிறுவனங்களுக்கு எதிரான அகிம்ஸா வழியாகக் கையாண்டு வெற்றி கண்டவர்களில் மகாத்மா காந்தி முதன்மையானவர்.
English
Refusal to eat, as a protest against unjust or unacceptable conditions. Social workers and other activists have called attention to existing conditions by going on such fasts themselves or by organizing groups to refuse food.