Huntington's disease
ஹண்டிங்டன் நோய்
தமிழ் விளக்கம்
இது மரபணுக் கோளாறால் வரும் ஒருவகை வலிப்பு நோய். இந்த மரபணு தாங்கிய பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளில் பாதிப் பேரை இந்த நோய் தாக்கலாம். உளத்திறன் அழிதல், மூளைத்தேய்வு, மறதி, அறிவாற்றல் இழப்பு, ஸ்திரமற்ற மனநிலை, பிரமை, வலிப்பு போன்ற கோளாறுகள் இந்நோயின் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் பெரும்பாலும் 30 வயதிற்கு மேல்தான் வெளிப்பட ஆரம்பிக்கும். இந்த நோயுள்ளவர்களுக்கும் அவரது சந்ததியினருக்கும் மரபணு ஆலோசனைகள் வழங்கப்படவேண்டும்.
English
A genetic disorder also known as Huntington's chorea. It is transmitted by a dominant gene and affects half the offspring of those who carry the genes. The symptoms, which include mental deterioration, such as hallucination, profound mood swings, dementia, and chorei-form movements, do not appear until about age 30. Genetic counseling is important for those who have the disease and for their offspring.