hypnosis
அறிதுயில்நிலை, தூங்கத் தூண்டல், மன ஆற்றலால் உறங்கத் தூண்டல், உறக்கப்போலி
தமிழ் விளக்கம்
உடலைத் தளர்வாக வைத்துக்கொண்டு மனதை ஏதாவதொரு கருத்திலோ, நிகழ்விலோ கவனம் செலுத்தச் செய்யும் போது அரைமயக்க நிலையான அறிதுயில் நிலை உருவாகும். மனம் அதன் தன்னறிவுடன் அல்லது விழிப்பு நிலையில் இருக்கும் போது எதை ஏற்கலாம் / ஏற்கக்கூடாது எதைச் சொல்லலாம் / சொல்லக்கூடாது என்று வடிகட்ட ஆரம்பிக்கும். மாறாக அறிதுயில் நிலையில் மனதின் வடிகட்டும் சக்தி மந்தமாகி மனதின் ஆழத்தில் உள்ள விஷயங்களை வெளிக் கொண்டுவருவது மட்டுமல்ல, மனம் பின்பற்றத்தக்க சில ஆலோசனைகளையும் மனதில் ஆழமாகப் பதிக்கலாம். அறிதுயில் நிலைமூலமாக ஆழ்மனதில் நிலைபெற்றுவிட்ட எந்தெந்த விசயங்கள் மனதைச் சஞ்சலப்படுத்துகின்றது என்பதை அறிந்து அதைக் களையலாம். அதே மாதிரி மனம் தன்னால் இயலாது என்று கருதும் விசயங்களை ஆழ்மனதிலிருந்து அகற்றி, போதைப் பழக்கத்தை நிறுத்த, வலியைக் குறைக்க, தேவையற்ற பயத்தைப் போக்க முடியும் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.
English
The phenomenon of being in a mental state of aroused concentration so intense that everything else in the subject's consciousness is ignored. All hypnosis is self-hypnosis, and the role of the hypnotist is to offer suggestions for deepening the level of concentration. Generally, hypnotized subjects will not do anything contrary to their moral or ethical codes and can come out of trances at will. Forms of hypnosis are used successfully in therapeutic interventions, such as hypnotherapy. Subjects can be taught to use self-hypnosis to achieve specific goals such as weight loss, cessation of smoking, pain relief, and overcoming of a phobia.