hypnotherapy
அறிதுயில் மூலம் சிகிச்சை அளித்தல்
தமிழ் விளக்கம்
சுயமாகவோ, பயிற்சியாளரைக் கொண்டோ அடையப்படும் அறிதுயில் நிலை உளச்சிகிச்சை முறையின் முக்கிய சிகிச்சை முறையாகும். அறிதுயில் நிலைக்கு உட்படுத்தப்படும் நோயாளி, பிறநோயாளிகளை விட ஆழ்மனநிலையில் அவருக்கு நலம் பயக்கும் புதிய எண்ணங்கள், மனோபாவம், நடத்தை, உணர்வுகள், மற்றும் மாற்றங்களை ஏற்றுக்கொள்பவராக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. போதைப் பழக்கத்தை நிறுத்த, வலியைக் குறைக்க, தேவையற்ற பயத்தைப் போக்க, எடை இழப்பை நிறுத்த, அர்த்தமற்ற கவலை மற்றும் பயத்தைப் போக்கச் செய்யப்படும் சிகிச்சை முறைகளில் இது நல்ல பலனை அளிக்கின்றது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.
English
The use of hypnosis and self-hypnosis is an adjunct or central tool in the psychotherapy process. Hypnotherapy has been used in psychotherapy since Sigmund Freud's (1856–1939) earliest analytic cases and is now used especially in the treatments of phobia, pain relief, weight loss, cessation of smoking, and anxiety.