hypomanic episode

மந்த பித்த சம்பவங்கள்

தமிழ் விளக்கம்

மந்த பித்தக் குழப்பத்திற்குச் சரியான உதாரணம் இருமனக் குழப்பம். இந்த நோயால் பாதிக்கப்படும் மக்கள் மன ரீதியாகக் களிப்பு, சோர்வு என்னும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை மாறிமாறி உண்டுபண்ணும் பித்தக் கோளாறினால் அவதிப்படுகிறார்கள். பொதுவாக இந்நோய் நீண்டநாள் மனச்சோர்வினால் ஏற்படுகிறது. இதை மருத்துவ ரீதியாகச் சொல்லும்போது ‘பைத்தியம்’ எனச் சொல்லால் குறிக்கின்றனர். இந்த நோயுள்ளவர்கள், பார்ப்பதற்கு மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டவர்கள் போல்தான் காணப்படுவார்கள். சில பேர் மட்டுமே பைத்தியமும் மனச்சோர்வும் கலந்த நிலையை வெளிப்படுத்துவார்கள்.
தீவிர பைத்திய நிலை, சில சமயங்களில் மாயத்தோற்றங்கள் காணும் நிலைக்கும், மருட்சி நிலைக்கும் வழிவகுக்கும். இந்நோய் பீடித்த எல்லோருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் தென்படுவதில்லை. உடலைப் பரிசோதிப்பதன் மூலம் இந்நோயைக் கண்டறிய முடியாது. ஒருவர் இருமனக் கோளாறால் பாதிக்கப்பட்டவரா அல்லது வெறுமனே ஒரு முனைக் கோளாறான மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டவரா என்பதைக்க கண்டறிய. மனச்சோர்வும், பைத்திய நிலையும் மாறி மாறி இருந்தால் இருமனக் கோளாறு உள்ளவர் என்றும், மனச்சோர்வினால் மட்டும் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர் ஒரு முனைக்கோளாறினால் (Unipolor Depression) பாதிக்கப்பட்டவர் என்றும் அறிந்து கொள்ளலாம்.

English

A symptom found in some of the mood disorders, especially bipolar disorder, consisting of an abnormally and persistently elevated, expansive, or irritable mood lasting at least four days. This may include feelings of inflated self-esteem, grandiosity, pressured speech, flight of ideas, distractibility, and psychomotor agitation, all of which are a clear departure from the individual's usual mood and functioning. The symptoms are identical to those in a manic episode except they are not as severe and do not include the possibility of delusion or hallucination or other psychotic features.