hypothalamus

முன்மூளை கீழுள்ளறை, மூளையின் அடிப்பகுதி

தமிழ் விளக்கம்

மனித உடலின் இயல்பான வெப்ப நிலையையை மட்டுமல்ல, தன்னாட்சி நரம்பு மண்டலம், பட்டினி, தாகம், போன்ற உடலை ஒழுங்குபடுத்தும் தன்னிச்சையான செயல்களைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதி ஹைப்போதலமஸ் ஆகும். ஹைப்போதலமஸ் ஆனது உடலின் வெப்பநிலை அதிகமானால் குறைக்கவும், குறைந்தால் அதிகரிக்கவும் உதவுகிறது .மேலும் உடலில் எவ்வளவு வெப்பம் இருக்க வேண்டும் எனக் கட்டுப்படுத்தவும் செய்கிறது . கோடை காலங்களில் ஹைப்போதலமஸின் முன்பகுதி உலர்ந்து இரத்தக்குழாய்களை விரிவடையச்செய்தும், அதிக வியர்வையை உற்பத்தி செய்தும் உடலைக் குளிர்ச்சியாக வைக்கிறது . குளிர் காலங்களில் தசைகளைச் சுருக்கி உடலே வெப்பத்தை உருவாக்கச் செய்கிறது. உடலின் வெப்பத்தை சமச்சீராக வைத்திருப்பதால் ஹைப்போதலமஸை தெர்மோஸ்டாப் என்கிறார்கள்.

English

The part of the brain that controls the autonomic nervous system (ANS) and many of the body's regulating systems such as hunger, thirst, and temperature. It is also thought to play a major role in emotion and motivation.