hypothesis

கருதுகோள், கற்பிதமான, அனுமானம், உய்ப்பு, ஊகம், உய்த்துணர்வு, வாதத்துக்கு ஆதாரமாய்க் கொண்ட கருத்து

தமிழ் விளக்கம்

உண்மையறியும் முறைகளில் ஒன்று. கருதுகோள் (hypothesis) என்பது ஒரு பிரச்சினைக்குத் தீர்வாக முன் வைக்கப்படும் தற்காலிகமான ஓர் ஊகம் ஆகும். இது, ஒரு தோற்றப்பாட்டை (Phenomenon, facts) விளக்குவதற்காக முன்வைத்த ஒரு கருத்தாகவோ அல்லது பல தோற்றப்பாடுகளுக்கு இடையே இருக்கக்கூடிய தொடர்புகள் குறித்த தர்க்க முறையான ஒரு கருத்தாகவோ இருக்கலாம். அறிவியல் வழிமுறைகளின்படி, ஒரு கருதுகோளானது சோதனை செய்து பார்க்கக் கூடியதாக இருத்தல் வேண்டும். அறிவியலாளர்கள், இத்தகைய கருதுகோள்களை, முன்னையக் கவனிப்புகளிலிருந்தோ அறிவியற் கோட்பாடுகளை விரிவுபடுத்துவதன் மூலமோ ஊகித்து முன்வைக்கிறார்கள். 21 ஆம் நூற்றாண்டில், கருதுகோள் என்பது ஆய்வுசெய்து நிறுவவேண்டி எடுத்துக்கொண்ட ஒரு எண்ணக் கருவாகவே கருதப்படுகிறது. ஒரு கருதுகோள் பற்றிய முறையான மதிப்பீடு ஒன்றைச் செய்வதற்கு, அதனை முன்வைத்தவர் அதன் அடிப்படைகளைத் தெளிவாக வரையறுக்கவேண்டும். ஒரு கருதுகோளை உண்மை என நிறுவ அல்லது பிழை என மறுக்கக் கூடுதல் வேலை செய்யவேண்டும். சில நேரங்களில் தங்களுக்குச் சரியாகப் புரியாத ஒன்றை விளக்க முற்படும் போது இவ்வார்த்தையை பயன்படுத்துவதும் உண்டு.

English

A tentative proposition that describes a possible relationship among facts that can be observed and measured. The proposition is often stated in negative fashion as a null hypothesis (for example,“There is no difference between the work of MSWs and BSWs as measured by. . . . ”). Social workers and other professionals also use the term informally to indicate a theory believed to account for what is not entirely understood.