hypoxia
தாழாக்சியம், உயிர்வளிப் பற்றாக்குறை, ஆக்சிசன் பற்றாக்குறை
தமிழ் விளக்கம்
தாழாக்சியம் (Hypoxia அல்லது hypoxiation) முழுமையான உடலோ (பொதுப்படை தாழாக்சியம்) அல்லது உடலின் ஒரு பகுதியோ (இழைய தாழாக்சியம்) தகுந்தளவு ஆக்சிசன் பெறாதிருக்கும் நோய் நிலை ஆகும். வழக்கமான உடலியக்கத்திலேயே ஒருவரின் தமனிய ஆக்சிசன் நிரம்பலில் வேறுபாடுகள் இருக்கும்; காட்டாக கடும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும்போது ஆக்சிசன் கூடுதலாக செலவழிக்கப்படுகிறது. குருதியில் எடுத்துச் செல்லப்படும் ஆக்சிசன் அளவு கலங்கள் வேண்டுகின்ற அளவை விடக் குறைவாக இருப்பின் தாழாக்சிய நோய் நிலை ஏற்படும். முழுமையான அளவில் ஆக்சிசன் வழங்கல் தடைப்படுமாயின் அந்நிலை தாழாக்சியம் அனோக்சியா (anoxia) என அறியப்படுகிறது. உயரமான இடங்களில் ஏற்படும் தாழாக்சிய நோயில் தலைவலி, களைப்பு, மூச்சிறைப்பு, பொய் உற்சாகம், குமட்டல் போன்ற அறிகுறிகள் உண்டாகின்றன. தீவிரமான தாழாக்சிய நிலையில் அல்லது விரைவாகத் தாக்கிய தாழாக்சிய நிலையில் உணர்வு நிலையில் மாற்றங்கள், வலிப்புத் தாக்கம், ஆழ்மயக்கம், ஆண்குறி / பெண்குறி விறைப்பிலிருந்து மீளாதிருத்தல் மற்றும் இறப்பு நிகழலாம். தீவிர தாழாக்சியம் தோலில் நீல நிறம் தோன்றச் செய்வதால் இந்நிலை நீலம் பூரித்தல் என்றழைக்கப்படுகிறது. இது ஆக்சிசனுடன் பிணைக்கப்பட்ட குருதிவளிக் காவியின் நிறம் நல்ல சிவப்பாகவும் ஆக்சிசன் பிணைக்கப்படாத குருதிவளிக்காவி கரும் சிவப்பாகவும் இருப்பதால் தோல் வழியே பார்க்கும்போது கூடுதலான நீல நிறத்தை தெறிக்கும் தன்மையுடையதாகிறது.
English
Less oxygen than is needed to maintain health.