hysteria

மிகையுணர்ச்சிவசம், மிகைப்படுத்தப்பட்ட அல்லது கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சி அல்லது பரவச நிலை

தமிழ் விளக்கம்

பயத்தினாலோ, பரவசத்தாலோ சுயக்கட்டுப்பாட்டை இழக்கும் நிலை, உளவியல் பிரச்சனைகளால் உடலில் ஏற்படும் மாற்றங்கள். இது அடக்கி வைக்கப்பட்ட பாலுணர்வு இச்சைகளாலோ அல்லது சிறுவயதில் ஆண்குழந்தைகளுக்கு எதிர்பாலின பெற்றோர் மீது (தாயின் மீது) ஏற்படும் ஒருவகையான சிற்றின்ப இச்சையாலோ ஏற்படும் அறிகுறிகளைக் குறிக்க பிராய்ட் கையாண்ட சொல்லாடல்.
பார்க்க: conversion disorder - எந்தவிதமான வெளிப்படையான காரணங்களின்றி மன அழுத்தத்தின் விளைவாக ஏற்படும் உடல் ரீதியாக வரும் உபாதைகள். வலிப்பு, மயக்கம், உளப்பிரச்சனைகள் உடல் உபாதைகளாக மாறும் தன்மை. உள்ளத்திலிருப்பதை நேரடியாக வெளிப்படுத்த இயலா நிலையில், அப்படி வெளிப்படுத்தினால் சிக்கலுண்டாக்கும் என்று தெரிவதால், அதை வேறுவிதமாக வெளிப்படுத்துவது. மயக்க மடைதல், வலிப்பு, தசை இயக்க ஒருங்கிணைப்பின்மையால் தள்ளாட்டம், பக்கவாதம் போன்ற அறிகுறிகள்.
anxiety hysteria - கவலையால் ஏற்படும் நரம்புக்கோளாறினால் பெண்டிர் உடல், உளப்பண்பு மற்றும் உரத்தையும் பாதிக்கும் நோய் -

English

A term originally used by Sigmund Freud (1856–1939) to describe patients with symptoms he believed to be the result of suppressed sexual and oedipal conflicts. Lay people tend to use this term for any intensely felt and dramatically expressed range of emotions. See also conversion disorder and anxiety hysteria.