ICD-10

நோய்களுக்கான சர்வதேச வகைப்பாட்டின் பத்தாம் பதிப்பு

தமிழ் விளக்கம்

நோய்களுக்கும், நலக்கேடுகளுக்குமான அனைத்துலகப் புள்ளியியல் வகைப்பாடு (International Statistical Classification of Diseases and Related Health Problems) என்பது எல்லாவிதமான நோய்களையும் உள்ளடக்கி, அவற்றின் அறிகுறிகள், அதனால் ஏற்படும் பாதிப்புக்களை வகைப்படுத்திக் குழப்பம் ஏற்படாதவாறு, தனிச்சுட்டுத் தருமாறு குறியீடுகளை வழங்கும் முறையாகும். இந்த முறையை உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிடுகிறது. 'நோய்களுக்கும், நலக்கேடுகளுக்குமான அனைத்துலகப் புள்ளியியல் வகைப்பாடு' என்பதை ஆங்கிலத்தில் சுருக்கமாக 'அனைத்துலக நோய்கள் வகைப்பாடு' (அ.நோ.வ) எனும் கருத்துக்கொண்ட ஐ.சி.டி (ICD - International Classifiaction of Diseases) என்று குறிப்பர். 1949 இல் ஆறாவது பதிப்பு வெளியிடப்பட்டது, இது உளநலக் குறைபாடுகளை உள்ளடக்கிய ஆறாவது பதிப்பு. 1949 ஆம் ஆண்டிலும், 1977 ஆம் ஆண்டு ஒன்பதாம் பதிப்பும் வெளியிடபட்டது. பத்தாம் பதிப்பை உருவாக்கும் வேலைகள் 1983 இல் ஆரம்பித்து 1992 இல் நிறைவுபெற்றது. நோய்களுக்கான குறியீட்டுப் பட்டியலில் அ.நோ.வ -9 இல் இல்லாதவை புதிதாகச் சேர்க்கப்பட்டது. இதுவே தற்போது பயன்பாட்டில் உள்ள நோய்கள் வகைப்பாட்டு முறையாகும், எனினும் நாடுகளுக்குத் தக்கவாறு இவற்றில் சிறுசிறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பதினோராம் பதிப்பின் உருவாக்கம் உலக நல அமைப்பு மூலம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 2015 ஆம் ஆண்டளவில் இது வெளியிடப்படலாம் என நம்பப்படுகின்றது.

English

The tenth and current edition of the International Classification of Diseases (ICD).