ice
படிக மெத்தாம்பெடாமைன்
தமிழ் விளக்கம்
ஐஸ் என்பது படிக மெத்தாம்பெடாமைன் (crystal methamphetamine) எனப்படும் போதை மருந்தின் வட்டார வழக்கு அல்லது தெருப்பெயர். கோகைன் என்னும் உணர்விழக்கச் செய்யும் மருந்து வகையை விடவும், மற்ற போதை மருந்துகளை விடவும் விலை மலிவானதும், அதிக போதை தரக்கூடியதுமாகும். இதை மூக்கு வழியாக உறிஞ்சும் போது, அதிக மனக்கிளர்ச்சியை உருவாக்கினாலும், அந்த மனக் கிளர்ச்சி நீர்த்துப்போகும் போது மன அழுத்ததையும் மனச்சிதைவையும் உண்டாக்க வல்லது.
English
A highly addictive methamphetamine that is smoked to produce a period of euphoria that is more intense and much longer lasting than with cocaine or its derivative "crack." Far less expensive than other drugs of abuse, ice often produces symptoms of acute depression and psychosis after the euphoria ends. When this substance is injected, it is known as "crank."