id

ஆழ்மனவுந்தல்

தமிழ் விளக்கம்

அது, அகம், அதியகம் (Id, ego and super-ego) என்பன சிக்மண்ட் பிராய்டின் மனத்தின் கட்டமைப்பு மாதிரியை விளக்கும் உளச் செயற்பாட்டின் மூன்று பகுதிகள். அவை செயல் மற்றும் இடையூடாட்ட (interactive) மன வாழ்வை விளக்கும் மூன்று கோட்பாட்டு அமைப்புக்களாகும். மன மாதிரியின்படி, 'அது' ஒருங்கிணைக்கப்படாத உள நிகழ்வுகளின் போக்கின் அமைப்பாகவும், 'அகம்' ஒருங்கிணைக்கப்பட்ட உண்மைப் பகுதியாகவும், 'அதியகம்' நன்னெறிப்படுத்தும் பகுதியாகவும் இருக்கும். 'அது' என்பது ஆழ்மனமாகவும் / நனவிலி மனமாகவும், உணர்வு உந்தும் இயல்பென்றும் தமிழில் குறிக்கப்படுகின்றது. 'அது' அல்லது 'ஆழ்மனம்' அடிப்படை ஊந்துதல்களைக் கொண்ட ஆளுமைக் கட்டமைப்பின் ஒருங்கிணையாத பகுதியாகும். அது சிற்றின்ப உணர்ச்சிகள் கொண்டது. பிராய்டின் கருத்துப்படி, இந்த உணர்வு உந்தும் இயல்பின் செயற்பாடானது, மனிதரின் வாழ்வின் பிரதான நோக்கமான இன்பத்தினை அடைதலைப் (Pleasure Principle) பூர்த்தி செய்வதாகவேயுள்ளது. உணர்வு உந்தும் இயல்பின் பிரதான குறைபாடென்னவென்றால், இது வெளி உலகைப்பற்றி, யதார்த்த நிலைமைகளைப் பற்றிக் கவலைபடுவதேயில்லை.
2. பிராய்டின் கோட்பாடு - உளவியல் மேதை / உளவியலின் தந்தை என்றழைக்கப்படும் சிக்மண்ட் பிராய்ட் (1856-1939) கருத்துகள் மனித இனத்தின் வளர்ச்சியையும், மனித மனதையும் புரிந்துகொள்ள பெருமளவு உதவியது. நரம்பியல் மருத்துவரான இவர், உடல் ரீதியான பாதிப்பு எதுவும் இல்லாத நேரத்திலும், மனதால் மட்டுமே பாதிக்கப்படும் நோயாளிகளைப் பற்றித் தனது கவனத்தைத் திருப்பினார். மனநோய், மனித உளவியல், கனவுகளின் உட்பொருள், மனச்சிக்கல், மனச்சிதைவு, மனித மனத்தின் பரிணாமம், அன்றாட வாழ்க்கையில் உளவியல் தாக்கம், சமூகம், மதம், மதத்தின் தோற்றம் போன்றவற்றைப் பற்றிய உளவியல் ரீதியான இவரது ஆராய்ச்சிகளும் விளக்கங்களும் மானுட வாழ்க்கையைப் புதிய கோணத்தில் புரிந்து கொள்ள பெரிதும் உதவியதால் இவர் பெரிதும் மதிக்கப்பட்டார். பிராய்டின் இயக்கவியல் உளவியல் (Dynamic Psychology), மனிதரின் குணவியல்புகளில் ஏற்படும் மாற்றங்களை விளக்குவதாகும். இது பாலுணர்வு விருப்பு என்பதை மனித வாழ்வின் முதன்மையான உந்து சக்தி என விளக்கியது. அதை அடிப்படையாகக் கொண்டு மனநோய்களுக்குச் சிகிச்சை செய்த விதம், உணர்வு மாற்றீட்டுக் கோட்பாடு (theory of transference), உள்மன ஆசைகளின் வெளிப்பாடாகக் கனவுகளை விளக்கியது போன்ற கருத்துக்களால் சிக்மன்ட் பிராய்ட் உலகமெங்கும் அறியப்பட்டவரானார்.
3. சிக்மண்டு பிராய்டு மானிடரின் மனத்தை 1. உணர்வு மனம், (Conscious Mind), 2. உணர்விற்கு அப்பாற்பட்ட மனம் (Sub-Conscious Mind), 3. தொலை நோக்கு மனம். என்று மூன்று பகுதிகளாகப் பிரித்து விளக்கியது மனதைப் புரிந்துகொள்ள பெரிதும் உதவியது. மேலும் மானிடரின் குண இயல்புகள், 1. உணர்வால் உந்தப்படும் இயல்பு - உணர்வு உந்தும் இயல்பு (Id), 2. நான் என்னும் முனைப்பு - முனைப்பால் உந்தப்படும் இயல்பு (Ego), 3. மீஅகத்தால் உந்தப்படும் இயல்பு - அதியுயர் மனக் கூறு (Super Ego). என்ற மூன்று சூழ்நிலை உணர்வுகளாலேயே ஏற்படுகிறதென்றும், இந்த மூன்று உணர்வுகளுக்கு இடையில் நடக்கும் போராட்டமே மனித ஆளுமையைத் தீர்மானிக்கின்றது என்றும் விளக்கினார். மனிதரைப் புரிந்து கொள்ளவும் அவர்களுடைய பிரச்சனைகளுக்கு உளவியல் ரீதியான தீர்வு காணவும், பிராய்டின் கருத்துக்கள் உதவியாய் இருக்கின்றன.

English

In psychoanalytic theory, the part of the mind or psyche that harbors the individual's instinctive or biological drive, libido, or psychic energy. The id is completely unconscious, but id wishes are always being discharged. Its demands are centered on the body, and it is governed solely by the pleasure principle. It attempts to force the ego, which is generally governed by the reality principle, to meet its demands without regard to the long-term consequences.