Identification

அடையாளங்காணுதல், கண்டறியப்படுதல், இன்னதிதுவெனக் காணல், அடையாளமறிதல், ஒத்ததன்மை காணல், ஆளறிதல், இனமறிதல்

தமிழ் விளக்கம்

அடையாளப்படுத்திக் கொள்வதென்பது, தான் முக்கியமென்று கருதும் ஒருவரைப் பற்றிய மன பிம்பத்தை உருவாக்கி அவரைபோலவே சிந்திக்க, செயல்பட, உணர விரும்பும் மனச் செயல்பாடு. இந்த மாதிரி அடையாளப்படுத்திக் கொள்வதென்பது, அக மன ஒருங்கிணைப்பிற்கும், தனிப்பட்ட வளர்ச்சிக்கும் பெருமளவு உதவும்.

English

A mental process in which a person forms a mental image of another person who is important and then thinks, acts, and feels in a way that resembles the other person's behavior. Identification often promotes ego integration and personal growth.