identity crisis

அடையாள நெருக்கடி

தமிழ் விளக்கம்

மனிதர்கள் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் அடையாள நெருக்கடிகளைப் பற்றி பல உளவியல் அறிஞர்கள் எடுத்துரைத்துள்ளனர். எரிக்சன் என்ற உளவியலாளர் எடுத்துரைத்த எட்டு உளசமூகவிருத்தி நிலைகளில், அடையாள நெருக்கடி என்பது வளரிளம் பருவத்தில் / குமரப்பருவத்தில் எதிர்கொள்ளும், ஐந்தாவது நிலையான, தனித்துவம் (தன்னைப் பற்றிய நிலையான கருத்து), X கடமைக்கூற்று முரண்பாடு - (identity versus role confusion) நிலையை ஒத்ததாகும் என்று குறித்துள்ளார். இந்த அடையாள நெருக்கடிக் கட்டத்தில், அடுத்தவர்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு இணங்க நடக்க முடியுமா? அப்படி நடக்கவேண்டுமென்றால் தான் என்னவாக மாறவேண்டும்? என்ற சிந்தனை எழும் கட்டம். இதையே ஜேம்ஸ் மார்சியா (James Marcia) என்ற உளவியல் நிபுணர் அடையாள வளர்ச்சியும் அதையொட்டிய நெருக்கடிகளும் நான்கு நிலைகளில் ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளார். அந்த நிலைகளாவன 1. பெற்றோர்களிடத்திலிருந்து பெறப்பட்ட அல்லது முன் முடிவு செய்யப்பட்ட அடையாளம் (Identity foreclosure) 2. வளரிளம் பருவத்தில் ஏற்படுகின்ற இதுவா அதுவா என்றுணரமுடியா குழப்ப அடையாளம் (Identity diffusion) 3. பல்வேறு அடையாள மாற்றுகளை அறிந்திருந்தாலும் எதைத் தேர்வு செய்வது என்று புரியாமல் இருக்கும் தேக்க நிலை (Identity moratorium) 4. கடைசியில் ஒரு குறிப்பிட்ட அடையாளத்தைத் தேர்வு செய்து அதில் நிலைபெறும் தன்மை (Identity achievement) என்று குறித்துள்ளார்.

English

Confusion about one's role in life. The individual enters a period of doubt about being willing or capable of living up to the expectations of others and is uncertain about what kind of person to be if those expectations are not met.