Ideology

சித்தாந்தம்

தமிழ் விளக்கம்

சிந்தித்த முடிவு. ஒன்றைப் பற்றி நன்கு சிந்தித்ததால் கிடைத்த முடிவு சித்தாந்தம். சித்தம் + அந்தம் என்னும் சொற்கள் சேர்ந்ததே சித்தாந்தம் என்னும் சொல். ஆராய்ச்சி, அநுபூதி (அநுபவ ஞானம்) அறநெறி வளர்ச்சி, மானுட அபிலாஷைகள், அதனடிப்படையில் பிறந்த அரசியல், அதிலிருக்கும் பற்றுறுதி இவற்றால் கிடைக்கப்பெற்ற முடிவை சித்தாந்தம் என்கிறோம். உதாரணமாக சமூகப்பணியாளரின் சித்தாந்தம் எதுவென்றால், சலுகைகளும் வாய்ப்புகளுமற்ற மக்களுக்கு வாய்ப்புகளை அளிப்பதன் மூலம் சமத்துவமும் சமநீதியும் கொண்ட சமுதாயத்தை உருவாக்குவது.

English

A system of ideas that is the product of one's values, experiences, political persuasion, level of moral development, and aspirations for humanity. For example, the ideology of a social worker is likely to include a concern for equal rights for all people and an interest in providing greater opportunities for less privileged people.