idiosyncratic life-cycle transitions

ஒரு மனிதனின் வாழ்க்கைப் பருவத்தில் நடக்கும் இயல்புக்கு மாறான நிகழ்ச்சிகள்

தமிழ் விளக்கம்

ஒரு வாழ்க்கைப் பருவத்திலிருந்து இன்னொரு வாழ்க்கைப் பருவத்திற்கு மாறும்போது அது சடங்குகளுடன் தொடர்புபடுத்தப்பட்டு மாற்றம் அங்கீகரிக்கப்படுகிறது. ஆனால், இயல்புக்கு மாறான நிகழ்ச்சிகளில் (ஆண் திருநங்கையாக மாறுவது, கன்னித்தாய்மை) கொண்டாட்டத்திற்கு உரிய சடங்கு முறைகள் இருப்பதில்லை. இந்த நிகழ்வுகளை மிகவும் விசித்திரமான சடங்குகளுடன், சிரமத்துடனே சமாளிக்க வேண்டியுள்ளது. உதாரணமாக எதிர்பாராத மரணம், எதிர்பார்த்த மரண சூழ்நிலையிலிருந்து மாறுபட்டது. பிறவிக் குறைபாட்டுடன் பிறந்த குழந்தையை எதிர்கொள்ளும் விதம், சிறைத்தண்டனைக்கு உள்ளாவது, ஓரினத் திருமணம் மற்றும் அதையொட்டிய சடங்குகள் போன்ற நிகழ்ச்சிகள் இயல்புக்கு மாறானது என்று கருதப்படுவதால் அதை எதிர்கொள்வதும் இயல்புக்கு மாறானதாகவே அமைகின்றது.

English

Non-normative changes in an individual's phases of life. These transitions are considered unusual; thus, they are not marked by celebrations or rituals, and the person generally has even more difficulty coping with the new circumstance than the normal transitions. Examples include unexpected death, birth of a child with disabilities, imprisonment, homosexual marriage, and migration.