illiteracy
கல்லாமை, படிப்பறிவின்மை, கல்வியறிவின்மை, கல்வியில்லாத / எழுதப்படிக்கத் தெரியாத நிலை
தமிழ் விளக்கம்
இத்தகையவர்களை எழுத்தறிவற்றவர் analphabet, நெடுங்கணக்கை அறியாதவர் என்றும் சொல்வர். கல்லாமை என்பது கல்வி கற்றலைச் செய்யாமையைக் குறித்தது. கல்லாதவன் கூட்டத்தில் பேசத் தகுதியற்றவன். அவன் மற்றவருடன் உரையாட இயலாதவன். கல்வியில்லாதவனுடைய வாழ்க்கை தாழ்வுநிலை பெற்றதாகும் (பார்க்க: திருக்குறள் அதிகாரம் 41. கல்லாமை 401 நூலறிவுப் பின்புலம் இல்லாதவன் பேச்சு கட்டமில்லாமல் தாயம் விளையாடுவதைப்போல விளங்காமல் குழப்பமாக ஆகும் 402 கல்லாதவன் சொல்லைக் கேட்க விரும்புவது முலைகள் இல்லாப் பெண்ணைக் காதலித்தல் போல ஆகும் 403 கற்றவர் முன் எதுவும் பேசாதிருந்தால் கற்காதவர்கள் கூட நல்லவர்களே ஆவர் 404 படிக்காதவனிடம் ஓரோவழி தோன்றும் அறிவைக் கற்றோர் ஏற்பதில்லை 405 கற்றவர்களிடம் உரையாடும்பொழுது கல்லாதவன் தன்மதிப்பு மறைந்து போகும் 406 கல்லாதவர்கள் விளைச்சல் பயன்களைத் தர இயலாத களர் நிலம் போல உயிருடன் நடமாடும் பிணங்களே 407 தெளிந்த அறிவற்றோர் தோற்றப் பொலிவுடையராக இருந்தாலும் வண்ணம் பூசப்பட்ட மண் பொம்மைக்குத்தான சமம் 408 நல்லவர்களை வாட்டும் வறுமையைவிட கல்வி பெறாதவனின் செல்வம் கேடு விளைவிக்கும். 409 கற்றலே ஒருவனது மேன்மை - கீழ்மையைத் தீர்மானம் செய்வது 410 ஒருவன் அறிவு நூல் எவ்வளவு கற்றானோ அவ்வளவுக்கு அவ்வளவு விலங்குத் தன்மை நீங்கப் பெறுவான் என்று கல்லாமையின் இழிவைக் கூறுகிறது.
English
Not knowing how to read or write.