illiteracy, functional
நடைமுறை சார்ந்த கல்வியறிவின்மை, தொழில்சார் கல்வியறிவின்மை
தமிழ் விளக்கம்
ஓரளவு எழுதப் படிக்கத் தெரிந்திருந்தாலும், அதை சமூகப் பொருளாதார உறவுகளில் பயன்படுத்தி பலன்பெருமளவு அந்தக் கல்வியறிவு பற்றாக்குறையுடனிருப்பது. இது தனிமனிதர்களின் திறன் சார்ந்ததாக இல்லாமல், சமூகக் கலாச்சாரச் சூழ்நிலைகளினால் (கல்வி கற்க வசதியின்மை, பொருத்தப்பாடற்ற கல்வி முறை) ஏற்படுவது. 2. செயல்சார் கல்வியறிவின்மை என்பது அடிப்படைக் கல்விக்கு அப்பால் அன்றாட வாழ்க்கை மற்றும் செய்யும் பணியை / வேலையைச் சமாளிக்கத் தேவைப்படும் கல்வியறிவு இல்லாதிருப்பது. வெளிநாட்டில் குடிபெயர்வோர் அந்த நாட்டு மொழியில் எழுதப்படிக்கத் தெரியாது இருந்தால் அவர்களும் செயல்சார்ந்த கல்வியறிவற்றவர்களாகவே கருதப்படுவர்.
English
Possessing some reading and writing skills but not of sufficient quality to permit their use in normal socioeconomic relationships. This term usually refers to those whose literacy deficits are the result of cultural factors rather than mental retardation or developmental expressive writing disorder.