Immigration and Naturalization Service (INS), U.S.

குடிநுழைவு மற்றும் குடியுரிமைக்கான துறை

தமிழ் விளக்கம்

அந்நிய நாட்டினர், அமெரிக்க ஐக்கிய நாட்டில் நுழையவும் அங்கே தங்குவதையும், குடியிருத்தலையும், குடியுரிமை பெறுவதையும் கண்காணிக்கும் அலுவலகம். அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கான குடிநுழைவு மற்றும் குடிமையளிக்கும் முறைக்கான மெக்கரன் வால்டர் 1952 ஆண்டு சட்டம், 1965 ஆம் ஆண்டு திருத்தப்பட்டு, அதற்கான விதிகள் முறைப்படுத்தப்பட்டன. 1986 ஆம் ஆண்டைய குடிநுழைவுச் சீர்திருத்தம் மற்றும் கட்டுப்பாடுச் சட்டம் அதற்கு முன்னால் உரிய ஆவணங்களின்றி குடியேறியவர்களுக்கு சில சலுகைகளை அளித்து, அதற்குப் பிந்தைய குடிநுழைவிற்குப் பல கட்டுப்பாடுகளை விதித்தது.

English

The federal government organization within the U.S. Department of Justice that is responsible for regulating and enforcing the laws pertaining to the entry into and residence in the United States of people from other nations. The McCarran—Walter Act of 1952 (Immigration and Nationality Act, P.L. 82-414) and its 1965 amendments (P.L. 89-326) have been the nation's major codification of procedures for immigration and naturalization. The 1986 Immigration Reform and Control Act (IRCA) (P.L. 99-603) changed these regulations to permit any undocumented alien who entered the United States before that time to remain but making it more difficult for others to enter the country.