implosive therapy

உள்வெடிப்பு சிகிச்சை, உள்தகர்ப்புச் சிகிச்சை

தமிழ் விளக்கம்

உளவியலாளர்கள், சமூகப் பணியாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் தேவையற்ற பயத்தையோ, பயனற்ற நடத்தையையோ போக்க அவர்கள் எந்த எண்ணங்களால், நடத்தைகளால் அவ்வாறு தூண்டப்படுகிறார்கள் என்பதையறிந்து, அதை நீக்க அல்லது குறைக்கப் பயன்படுத்தும் பல்வேறு சிகிச்சை (systematic desensitization, flooding, implosive therapy, prolonged exposure therapy, in vivo exposure therapy, and imaginal exposure therapy) முறைகளில் ஒன்று. உள்வெடிப்புச் சிகிச்சை முறையில், ஒரு வாடிக்கையாளருக்கு எது பதட்டத்தை உருவாக்குகிறதோ அதை மேலும் தீவிரமாகக் காட்சிப்படுத்தி, அதிகப் பதட்டத்தை உணர வைக்கும் முறை. இவ்வாறு காட்சிப்படுத்தத் தூண்டப்படும் பதட்ட உணர்வுகள், காலப் போக்கில், அது தொடர்புடைய பதட்டங்களிலிருந்து விடுவிக்கும்.

English

In behavior therapy, the technique in which the client is presented with images of anxiety-producing stimuli and is encouraged to experience as much anxiety as possible. Because the anxiety-producing images do not result in any harm, the anxiety responses are not reinforced, and the symptoms are more likely to be extinguished.