impulse control disorder
உணர்ச்சிவயப்படல், உளத்தூண்டல் கட்டுப்பாடு கோளாறு, உள்ளுந்தல் கட்டுப்பாடின்மைக் கோளாறு, கட்டுப்படுத்தமுடியாத உளத்தூண்டல்
தமிழ் விளக்கம்
தனக்கும் பிறருக்கும் தீங்கிழைக்குமாறு கட்டுப்படுத்தமுடியாத சபல இச்சைகளால் உருவாகும் மனக்கோளாறுகளின் தொகுப்பு. பெரும்பாலான நேரங்களில் சபலத்தினால் செய்யப்படும் செயல்கள் மகிழ்ச்சியானதாயும், உணர்வுகளுக்கு வடிகாலாய் இருந்தாலும், அச்செயல் செய்யப்பட்ட பிறகு வருத்தப்படவேண்டிய நிலைக்கு ஆளாக்கிவிடும். கட்டுப்பாடின்றி சூதாடுவது, அணிச்சைத் திருட்டு (திருட்டார்வக் கோளாறு, திருட்டுவெறி kleptomania), எரியூட்டு வெறியர், (தீக்கொளுவு வெறி, pyromania), தலைமுடியைப் பிய்த்துக் கொள்ளல் (trichotillomania) போன்ற செயல்கள் இந்த வகையில் அடங்கும்.
English
A diagnostic group of mental disorders characterized by the repeated inability to resist some temptation that is harmful to one's self or others. In most cases, the individual becomes increasingly tense before succumbing to the temptation, feels pleasure and emotional release on completing the act, and then experiences regret after the act is over. Types of impulse control disorders are pathological gambling, kleptomania, pyromania, trichotillomania, and explosive dis order.