in-service training
பணியிடைப் பயிற்சி
தமிழ் விளக்கம்
ஒரு பணியாளரின், பணிக்கேற்ற ஆளுமையையோ அல்லது பணித்திறனையோ அல்லது குறிப்பிட்ட பணியில் மேலும் திறன் வளர்க்கவோ அவரைப் பணியிலமர்த்திய நிறுவனமே ஏற்பாடு செய்யும் பயிற்சிகள். இது பெரும்பாலும் மேற்பார்வையாளர்களாலோ, நிபுணர்களைக் கொண்டோ பணிபுரியும் இடத்திலே கொடுக்கப்படும் குறுகிய காலப் பயிற்சி. இதை பணியாளர் மேம்பாடுப் பயிற்சி எனவும் சொல்லலாம்.
English
An educational program provided by an employer and usually carried out by a supervisor or specialist to help an employee become more productive and effective in accomplishing a specific task or meeting the overall objectives of the organization. Usually, but not always, such training occurs on the job and for short periods. See also staff development.