in vitro fertilization
புறகருக்கட்டல், ஆய்வுக்கூடச் சோதனை முறையில் கருத்தரித்தல், வெளிச் சோதனை முறையில் கருத்தரித்தல், செயற்கை கருத்தரித்தல்
தமிழ் விளக்கம்
வெளிச் சோதனை முறை கருக்கட்டல் (IVF - In vitro fertilization) அல்லது ஆய்வுகூடச் சோதனை முறை கருக்கட்டல் என்பது உடலுக்கு வெளியே பெண் உயிரின் கரு முட்டையானது, விந்துடன் இணைந்து கருக்கட்டல் நிகழும் செயல்முறையாகும். இது செயற்கைக் கல முறைமூலம் செய்யப்படும் கருக்கட்டல் ஆகும். இவ்வாறு கருமுட்டையுடன், விந்தை இணைத்து, செயற்கையாக உருவாக்கப்படும் கருக்களை ஒரு பெண்ணின் கருப்பையில் தக்கமுறையில் வைப்பதன் மூலம் அக்கரு வளர்ந்து, கரு முளையமாகி (embryo) அப்பெண், ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தலாம். பொதுவாகக் குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வமிருந்தும், இயற்கையாகச் சில சிக்கல்களைக் கொண்டிருக்கும் தம்பதியருக்கு, இம்முறையினால் குழந்தை பெற்றுக் கொள்ள உதவலாம். இம்முறையால் பிறக்கும் குழந்தையைப் பொதுவான பேச்சு வழக்கில் 'சோதனைக் குழாய்க் குழந்தை' என அழைப்பார்கள். சோதனைக் குழாய் குழந்தை முறையைக் கண்டுபிடித்த பிரித்தானிய அறிவியலாளர் ராபர்ட் எட்வர்ட்சுக்கு 2010 ஆம் ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது.
English
Human conception by removing the woman's ovum surgically, placing it in a medium that preserves and nourishes it, introducing live sperm cells, maintaining the live cells until some growth and divisions occur, and then inserting the embryo in a woman's uterus.