in vivo assessment
இயல்பு நிலை மதிப்பீடு, இயல்புநிலைக் கண்காணிப்பு
தமிழ் விளக்கம்
சிகிச்சையின் பயனாக வாடிக்கையாளரிடம் ஏற்பட்ட மாற்றத்தை, அவர் இயல்பாக இயங்கும் நிஜ வாழ்க்கைச் சூழ்நிலையில் அவருக்குத் தெரிந்தோ, தெரியாமலோ பார்வையிட்டு அவரின் முன்னேற்றத்தைக் கணிப்பது. எடுத்துக்காட்டாக, மூடிய இடங்களைக் கண்டு அச்சப்படுபவருக்குச் (claustrophobia) சிகிச்சையளிக்கும் சமூகப்பணியாளர், நெருக்கடியான அல்லது ஆளற்ற மின்தூக்கிகளில் அவரை அழைத்துச் சென்று அதனால் அவரிடம் ஏற்படும் விளைவுகளைக் கண்காணிப்பது. தன்னுறுதியுடன் செயலாற்ற சிகிச்சை எடுக்கும் வாடிக்கையாளரைச் சந்தைக்கோ, சூப்பர் மார்க்கெட்டிற்கோ அழைத்துச் சென்று அவர் எவ்வளவு தூரம் உறுதிபட முடிவெடுக்கின்றார் என்பதை மதிப்பிடுவது. இந்த மாதிரியான மதிப்பீடுகளை வாடிக்கையாளரின் சுய கண்காணிப்பின் மூலமும், அவரே சொல்லும் தன்னிலை விளக்கங்களாலும் அறிய முடியாது.
English
Evaluating client progress by directly observing the client in actual life situations. It is conducted either overtly or unobtrusively with the client's awareness and permission. For example, in overt in vivo assessment, a social worker may accompany a claustrophobic client into a crowded elevator. In unobtrusive in vivo assessment, the worker may enlist an associate to observe a passive client use newly learned assertiveness techniques in the marketplace. These assessments are used when situational assessments are difficult to create and client self-monitoring is unlikely to demonstrate client behavior accurately.