in vivo desensitization
இயல்பு நிலையில் வைத்து உணர்ச்சி அகற்றல்
தமிழ் விளக்கம்
இது நடத்தை மாற்றுச் சிகிச்சையில் கையாளப்படும் அணுகுமுறை. எந்தத் தூண்டல்கள் ஒரு வாடிக்கையாளருக்கு அச்சத்தையோ அல்லது எதிர்மறை உணர்வுகளையோ தருகிறதோ, அந்த உணர்வுகளை வாடிக்கையாளர் இயல்பாக இருக்கும் நிலையில் கொடுத்துத் தூண்டுவது. சமூகப்பணியாளரும் வாடிக்கையாளரும் கலந்து பேசி, வாடிக்கையாளரைப் பதட்டப்படவைக்கும் தூண்டல்களை பட்டியலிட்டு, அதை முன்னுரிமைப்படுத்தி, தியானம், ஆழ்நத மூச்சுப் பயிற்சி, மனோ வசியம், தசைத் தளர்வு முறைகளின் மூலம் வாடிக்கையாளரை ஓய்வுநிலைக்குக் கொண்டுசென்று, அப்பொழுது தூண்டல்களைக் கொடுத்து, அத்தூண்டல்களின் மீதான மறுவினையை உணர்ச்சி இழக்கச் செய்வது.
English
A behavior therapy procedure in which the subject gradually approaches a feared stimulus while in a relaxed state. The subject and worker make a list of situations that elicit fear and rank these items from least to most anxiety producing. The subject then enters a state of relaxation through meditation, deep-breathing relaxation, imagery relaxation technique, muscle relaxation technique, and so on. In this state, the subject is gradually desensitized to the feared stimulus.