inalienable rights
பராதீனப்படுத்தவியலாத உரிமைகள், மாற்ற முடியாத உரிமைகள்
தமிழ் விளக்கம்
மனித உரிமை என்பது, எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். இந்த உரிமைகள் 'மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாகக்' கருதப்படுகின்றன. இனம், சாதி, நிறம், சமயம், பாலினம், தேசியம், வயது, உடல், உளவலு ஆகியவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருக்கும் இந்த அடிப்படை உரிமைகள், மனிதர் சுதந்திரமாக, சுமூகமாக, நலமாக வாழ அவசியமான உரிமைகளாகக் கருதப்படுகின்றன. மனித உரிமைகள் என்பதனுள் அடங்குவதாகக் கருதப்படும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுள், வாழும் உரிமை, சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமநிலை, நகர்வுச் சுதந்திரம், பண்பாட்டு உரிமை, உணவுக்கான உரிமை, கல்வி உரிமை என்பன முக்கியமானவை.
இந்திய அரசியலமைப்பு அளித்துள்ள அடிப்படை உரிமைகளான சமயச்சார்பு உரிமை, பேச்சுரிமை, கூட்டம் கூடும் உரிமை, நீதிபெரும் உரிமை, நாட்டின் பிறவிடங்களுக்கும் மற்றும் அண்டை நாடுகளுக்கும் செல்லும் உரிமை போன்ற உரிமைகள் மனிதனின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுபவைகளாக அமைந்துள்ளன.

English
Rights that cannot be taken away or given away except by the person possessing them. Societies have varying concepts of these rights. In the United States, inalienable rights include the rights of life, liberty, the pursuit of happiness, the freedom of speech and worship, and the right of due process of law. See also First Amendment rights and Fifth Amendment rights.