Inclusion
உட்படுத்தல், ஏற்றுக்கொள்ளல், சேர்த்துக்கொள்ளல்
தமிழ் விளக்கம்
Inclusion என்பது உட்செறிவுமிக்க வார்த்தை. கல்வி, பொருளாதார முன்னேற்றம், புனர்வாழ்வு, திட்டமிடல், நிர்வாகம், பொதுநிதி மேலாண்மை, மனித உரிமைகள் போன்ற பல துறைகளில் சமீப காலமாக மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் சொல்லாடல். அனைத்தையும் / சகலத்தையும் உள்ளடக்குதல், அனைத்தையும் / அனைவரையும் அரவணைத்துச் செல்லும் உணர்வு / சூழ்நிலை என்ற சமூகவியல் கோட்பாட்டிலிருந்து எழுந்த நிர்வாக நடைமுறையே உள்ளடக்குதல் அல்லது சேர்த்துக்கொள்ளல். பாகுபாட்டிற்கு (வயது, பாலினம், இனம், மதம், மொழி, பாலின அடையாளம்) எதிரான (Anti-discrimination), பன்முகத்தன்மைக்கு ஆதரவான (Appreciating Diversity), சமூக விலக்கலுக்கு எதிரான (Anti - Social Exclusion), பணியிடப் பன்முகத்தன்மைக்கு ஆதரவான (Workplace Diversity), உள்ளடக்கிய வணிகமுறைகள் (inclusive business) போன்ற தளங்களில் பயன்படுத்தப்படும் சொல்லாடல். பலவகையான பாகுபாட்டுப் பிரச்சனைகளால் வெகுஜன நீரோட்டத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான மனித உரிமைக் கருத்தாக்கங்கள் வலுப்பெற, வலுப்பெற உள்ளடக்கிய நடைமுறைகள் முதலில் கல்வி நிலையங்களில் குறிப்பாக ஊனமுற்ற குழந்தைகளுக்குக் கல்வி அளிக்கும் முறைகளில் படிப்படியாகச் செயல்முறைக்கு வந்தது. உடல், உள, சமூக, மனவெழுச்சிப் பாதிப்புக்குள்ளான மாணவர்கள் சாதாரண மாணவர்களைவிடப் பல சிக்கலான நடத்தைகளைக் வெளிப்படுத்துகின்றனர். அத்துடன் அவர்கள் தேர்ச்சி மட்டத்தை அடையமுடியாதும் தவிக்கின்றனர். அவ்வாறான மாணவர்களுகு விசேஷக் கல்வியளிக்கும் (special education) முறை முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ் விசேஷ உதவி தேவைப்படும் மாணவர்களை, ஆரம்ப காலத்தில் தனியாகப் பிரித்து சிறப்புக் கவனம் செலுத்தினர். கால ஓட்டத்தில் விசேஷக் கல்விக் கொள்கை நிறுவனமயப்படுத்தபட்டு, உதவி பெறும் விசேஷப் பாடசாலைகள் (special schools), ஒன்றிணைத்தல் (integration), விசேஷக் கல்வி (special education) அலகுகள் என வளர்ச்சியடைந்தது. இருப்பினும் இக் கல்வியைப் பெற்ற மாணவர்கள், சாதாரண மாணவர்களைப்போல் வகுப்பறைக் கற்பித்தல் சூழ்நிலையைச் சமமான முறையில் பயன்படுத்த முடியாது அவதிபட்டனர். அதைச் சீரமைத்து, எல்லோரும் சமபயன் பெற தற்போது உட்படுத்தல் கல்வி என்று மேம்படுத்தப்பட்டுள்ளது.
உட்படுத்தல் கல்வி என்பது இன்று உலகளாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்வியாக உள்ளது. எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்ற சமத்துவ சிந்தனையிலான வெளிப்பாடாகவே விசேஷத் தேவையுடைய பிள்ளைகள் சாதாரணப் பாடசாலைகளில், சாதாரண வகுப்பறையில் அனுமதிக்கப்படுகின்றார்கள். இவர்கள் இம் மண்ணில் முழுமையாய் வாழப் பிறந்தவர்களென்றும், அந்த வகையில் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் இணைந்து கொள்வது அல்லது கலந்து கொள்வது அவர்களின் அடிப்படை உரிமையென்றும், இவ்வுரிமையை நிலைநாட்டும் உன்னத நோக்குடனேயே உட்படுத்தல் கல்வியின் தத்துவம் விரிவடைகின்றது. விசேஷக் கல்வித் துறையில் இவ் உட்படுத்தல் கல்வி என்பது இன்று ஒரு முக்கியமான கல்வித் தத்துவமாக மாறியுள்ளது.

English
An education policy that allows students with disabilities to be integral members of age-appropriate classrooms in neighborhood schools. In keeping with U.S. federal legislation, which requires schools to educate students with disabilities in the "least restrictive environment" possible, needed special services and supports are brought to the student in the regular classroom. Inclusion suggests that the student is an integral part of the classroom throughout the day, possibly with the provision of special resources for unique needs. Inclusion compares to mainstreaming, which allows students with disabilities to participate in regular education programs to the degree that they are able without special assistance and to leave the classroom for necessary special help. See also Education for All Handicapped Children Act of 1975 and Individuals with Disabilities Education Act (IDEA).