inclusionary cultural model

கலாச்சாரப் புரிதலுக்கான மாதிரி

தமிழ் விளக்கம்

ஒருவருடைய நடத்தை மற்றும் மனோபாவம் அவர் சார்ந்த கலாச்சாரத்தால் கட்டமைக்கப்படுகிறது. கலாச்சாரத் தாக்கத்தை புரிந்துகொள்ள, பல்வேறு கலாச்சாரப் பின்னணி கொண்டவர்களைக் குழுவாக்கி, அந்தக் குழுவுடன் தொடர்பாடுதல் மூலமாக, மாற்றுக் கலாச்சாரக் கூறுகளை அனுபவ ரீதியாகப் புரிந்துகொண்டு உள்வாங்க செய்யப்படும் பயிற்சிமுறை. இம்முறை தனித்து அடையாளம் காணத்தக்க மாற்று கலாச்சாரத் தன்மை கொண்ட 18-45 பங்கேற்பாளர்களைக் கொண்ட குழுவிலோ, வகுப்பறையிலோ அல்லது பயிற்சியிலோ உபயோகப்படுத்தப்படும். இதில் பங்கேற்பவர்கள் பிற கலாச்சாரத்தைச் சேர்ந்த குழு உறுப்பினர்களிடம் காணும் கலாச்சாரக் கூறுகளில், அவர்களுக்கிருக்கும் ஒருதலைச் சார்பு மற்றும் முன் தீர்மான கருத்துக்களைக் கலந்துரையாடல் மூலம் பகிர்ந்து கொண்டு அடையாளம் காண உதவி, பின் ஒத்த கருத்துடைய உறுப்பினர்களை ஒரு குழுவாக்கி, தங்களுடைய கருத்துக்கள், ஆய்வின் அடிப்படையில் (உன்மையானதா என்று கண்டறிதல்) உருவானதா அல்லது தங்களின் சொந்தக் கலாச்சார அனுபவத்தில், காழ்ப்புணர்ச்சியால் உருவானதா என்று புரிந்து கொள்ள உதவுவது. இந்த முறையின் மூலம் மாற்றுக் கலாச்சாரங்கள் பற்றிய தப்பெண்ணங்கள் / சார்பெண்ணங்கள் மறைந்து பிற கலாச்சார அடிப்படைகளை உள்ளடக்க உதவி செய்யும்.

English

An experiential learning process, using group work methods as a supplement to the presentation of didactic material, designed to help participants develop awareness about behaviors and attitudes within themselves that are likely to be culturally influenced. The model is generally used with classes and training groups of 18 to 45 members, often in settings such as social agencies in which the workers serve identifiable cultural groups. The group members are led through discussions about behaviors they consider typical of various ethnic groups, followed by exercises in identifying bias and stereotypes. Participants then include themselves in subgroups with those characteristics they can identify, thus facilitating their opportunity to distinguish between objective data and culturally influenced "information."