incoherence
தெளிவற்ற, ஒன்றிற்கொன்று தொடர்பற்ற, தாறுமாறான
தமிழ் விளக்கம்
ஒன்றிற்கொன்று தொடர்பற்ற எண்ணங்கள். தாறுமாறான / ஒழுங்கற்ற சிந்தனை. இந்நிலை மனநோயின், இருமுனைக் கோளாரின், தீவிரமான பதட்ட நிலையின் அறிகுறியாகும். இவர்களுடைய பேச்சில் சொல் தடுமாறும், ஒரேநேரத்தில் தொடர்பற்ற பலவற்றைப் பேசிப் பிதற்றுவார்கள். அவர்கள் செயல்களில் சிந்தனையில் தருக்க ரீதியான காரணங்கள் இருக்காது. அவர்களுடைய தொடர்புகள் நெறிதவறி, தெளிவற்றிருப்பது முக்கியமான அறிகுறியாகும்.
English
Disconnected thoughts, often a symptom of psychosis, bipolar disorder in the manic phase, and severe anxiety. Incoherent behavior includes talking about many subjects almost simultaneously, loose association, and nonlogical reasoning.