income strategy

வருமான உத்திகள், வருமான ஏற்பாடு, நேரடிப் பொருளுதவி

தமிழ் விளக்கம்

வரையறுக்கப்பட்ட தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, அவர்களின் தேவைகளைப் பொருட்களாகவோ (உ.ம். இலவச தொலைக்காட்சி பெட்டி), சேவைகளாகவோ (ஆலோசனை, சட்ட உதவி, மருத்துவ சிகிச்சை) வழங்காமல், நேரடியாகப் பண உதவி செய்வது. உதாரணமாக வீடற்ற ஏழைகளுக்கு, அரசு வீடுகளோ, குறைந்த வாடகையில் வீடுகளோ கொடுக்காமல், அவர்கள் தங்கள் குடும்ப வருமானத்தை எப்படி சிக்கனமாக நிர்வகிப்பது என்று ஆலோசனை வழங்காமல், நேரடியாகப் பண உதவி அளித்து, தங்களுக்கான வீடுகளைத் தேர்வு செய்து கொள்ளும் சுதந்திரத்தை வழங்குவது.

English

A social welfare policy of providing direct monetary aid, based on predetermined objective criteria, to those in need. This is distinguished from a service strategy policy, in which social workers evaluate each person's situation and provide counseling and in-kind benefits. For example, an income strategy would be to pay each needy family a certain amount for housing so that the family can make their own choices. In this example, the service strategy would be to provide public housing or advice about living more frugally.