incompetent

செயல் திறமையற்ற, ஆற்றல் போதாத, திறமைக் குறைவுடைய, சட்டப்படி உரிமையற்ற, யோக்கியதையற்ற, ஏலாத, தகுதியில்லாத, இயலாத, திறங்கெட்ட, சாப்பை

தமிழ் விளக்கம்

1. கடமைகளை நிறைவேற்ற இயலாமை 2. இது சூழலைப் பொறுத்து பல பொருள் தரும் ஒரு சட்டச் சொல்லாடல். ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தவோ அதற்கு சம்மதம் தெரிவிக்கவோ இயலாநிலை. சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுமளவிற்கு தெளிவற்ற நிலை. விவரமானவர்களின் உதவி இல்லாததால் சட்டபூர்வமான விசாரணையை எதிர்கொள்ள இயலாநிலை. தன்மீது சாட்டப்பட்ட குற்றத்தைப் புரிந்துகொள்ளுமளவோ அல்லது அதன் விளைவுகளைப் புரிந்துகொள்ளுமளவோ விவரமின்மை.

English

1. Without the ability to fulfill obligations. 2. A legal term that has several connotations, depending on the circumstances. These include inability to consent legally to make or execute a contract, insufficiency in knowledge needed to carry out some legal obligation, inability to stand trial because the person is unable to assist rationally in his or her own defense, or inability to understand the nature of the charge or the consequences of conviction.