incremental social change
படிப்படியான சமூக மாற்றம்
தமிழ் விளக்கம்
மக்களின் மாறிவரும் மதிப்பீடுகள், தேவைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு ஏற்றவாறு சமூக நிறுவனங்கள் (உ.ம். குடும்பம், பள்ளி, மதம்) படிப்படியாக புதுச்சூழலை ஏற்றுக்கொண்டு (adaptation) சீரமைத்துக் கொள்ளுதல் (adjustment). சமூக நிறுவனங்கள் தங்களின் இருப்பையும், அடிப்படைத் தன்மையையும் தக்கவைத்துக்கொண்டு, மக்களின் தேவைகளுக்கு இடமளிக்கும் முகமாக, தங்களின் குறிக்கோளையும் வழிமுறைகளையும் மாற்றிக்கொள்வது. இது (பாரம்பரிய நிறுவனங்களை உதாசீனப்படுத்தி விட்டு புது நிறுவனங்களை உருவாக்கும்) கட்டமைப்பு சமூக மாற்றங்களிலிருந்து வேறுபட்டது.
English
Gradual adaptation and adjustment made by social institutions to reflect changes in the values, needs, and priorities of the people. Institutions retain their existence and basic character but modify their goals and means to accommodate to the demands of those served. This is the opposite of structural social change.