incrementalism
படிப்படியாக, நிதானமாக
தமிழ் விளக்கம்
கொள்கைகள், மனப்பான்மை மற்றும் நடத்தைகளில் ஏற்படும் படிப்படியான மாற்றங்கள். எந்த ஒரு மாற்றத்தையும் மக்கள் எளிதில் ஏற்றுக்கொண்டு ஒத்துழைப்பு தர மாட்டார்கள் என்பதால், மாற்றத்திற்காகத் திட்டமிடுதலில், குறிப்பாக சமூக நல திட்டமிடலில், மாற்றங்களை நிதானமாக, படிப்படியாக அறிமுகப்படுத்துவார்கள். உதாரணமாக சமூகநலத் திட்டமிடலில், சமூக நலத் திட்டங்களின் பயனாளரின் தகுதியைத் தீர்மானிப்பதிலும் (eligibility), பயன் அளவைத் (quantity of benefits) தீர்மானிப்பதிலும் படிப்படியாக மாற்றங்களை அறிமுகப்படுத்துவார்கள்.
English
Gradual change in policies, attitudes, and behaviors. Social welfare planners tend to use incrementalism because of public resistance to adopting comprehensive programs all at once. For example, the Old Age, Survivors, Disability, and Health Insurance (OASDHI) program has made incremental changes by gradually increasing benefits and eligibility over the past 50 years.